Idhayam Matrimony

அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாக். பிரதமர் அமெரிக்கா பயணம்

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2025      உலகம்
Pak 2024-02-14

Source: provided

வாஷிங்டன் : அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் வாஷிங்டனுக்கு சென்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் வாஷிங்டன் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பிரதமர் ஷரீஃப், நியூயார்க்கில் இருந்து இன்று (செப். 25) வாஷிங்டன் செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஐ.நா. பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அவர் இன்றையே மீண்டும் நியூயார்க் திரும்புவார் எனக் கூறப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில், முதல்முறை பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் அமெரிக்க அதிபரை வெள்ளை மாளிகையில் நேரில் சந்திக்கின்றார். இறுதியாக, 2019 ஆம் ஆண்டின் ஜூலையில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பை சந்தித்தார்.

முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், தனது ஆட்சியில் பாகிஸ்தான் அரசுடனான உறவுகளை முற்றிலும் புறக்கணித்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு பின்னர் மீண்டும் பதவியேற்ற அதிபர் ட்ரம்ப், வெளிப்படையாக பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த ஜூன் மாதம், அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி அசீம் முனிர், வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து