எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஊட்டி : அ.தி.மு.க.வை யாராலும் அடிமையாக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடம் என்று பெயரை பெற்றுத் தந்தது அ.தி.மு.க.தான். ஒரு நபருக்குப் பணம் சொத்து அனைத்தும் இருந்தாலும் கல்வி ஒன்று தான் நிலையானது அதை யாராலும் அபகரிக்க முடியாது. மனிதனின் இறுதிக் காலம் வரை இருக்கக்கூடியது கல்விச் செல்வம் என்பதால் அந்தத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியது அ.தி.மு.க. தான்.
மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசுதான். முழுக்க முழுக்க மாநிலங்களின் நிதியைக் கொண்டு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார். ஆனால் திமுக ஆட்சியில் திறமை இல்லாத முதல்-அமைச்சர் பொம்மை முதல்-அமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலினால் இதுவரை எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவர முடியவில்லை. அதிகக் கடன் வாங்குவதில் முன்மாதிரியாக தமிழ்நாடு இருக்கிறது. ஊழல், கமிஷன் கரப்ஷன் உள்ளிட்டவற்றின் முன்மாதிரியாக திமுகதான் அதேபோல் டாஸ்மாக் பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவது முன்மாதிரியாக திமுக தான் குடும்ப ஆட்சி. திமுக அரசு குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததில் என்ன தவறு இருக்கிறது. வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நீங்கள் கூட்டணி வைத்தால் நல்லது. அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா?. அ.தி.மு.க. யாருக்கும் அடிமை இல்லை; அ.தி.மு.க.வை யாராலும் அடிமையாக்க முடியாது. கூட்டணிக் கட்சிகளை சுயமரியாதையோடு நடத்திவரும் கட்சி அ.தி.மு.க.; கூட்டணி கட்சிகளை அடிமையாக நடத்தி வருகிறது திமுக; சாறை உறிஞ்சிவிட்டு சக்கையை கூட்டணிக்கு தருகிறது திமுக.
காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் கூட்டணி ஆட்சி கேட்கிறார்கள்; செல்வப்பெருந்தகை மறுக்கிறார்; திமுக கூட்டணிக்கு உள்ளேயே பிளவு ஏற்படத் தொடங்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு தக்க பாடத்தைப் புகட்டி, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமைத்திட தமிழக மக்கள் உறுதியாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


