முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.,க்கு எதிரான ஆஷஸ் தொடர: இங்கிலாந்து அணி அறிவிப்பு

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2025      விளையாட்டு
Eng 2025-06-28

Source: provided

லண்டன் : பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆஷஸ் தொடர் 2025-26-க்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிடில் ஆர்டர் அதிரடி மன்னன் ஹாரி புரூக் வைஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்தியா தொடர் வரை ஆலி போப் வைஸ் கேப்டனாக இருந்தார்.

மீண்டும் அணிக்கு... 

பென் ஸ்டோக்ஸ் கேப்டன். அணியில் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் உட் இணைந்தனர். கிறிஸ் வோக்ஸ் இன்னும் தோள்பட்டைக் காயத்திலிருந்து குணமடையவில்லை என்பதால் தேர்வுக்குப் பரிசீலிக்கப்படவில்லை. 16 அணி வீரர்கள் பட்டியலில் வில் ஜாக்ஸ் இருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக மிக முக்கியமான ஓவல் டெஸ்ட் போட்டியை தன் தோள்பட்டைக் காயம் காரணமாகத் துறந்த பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு கேப்டனாக தொடர்கிறார். பெர்த்தில் நவம்பர் 21ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியிலேயே பென் ஸ்டோக்ஸ் ஆடுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

வில் ஜாக்ஸ் மீண்டும்...

இடது கால் முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் காரணமாக இங்கிலாந்து அணியில் இடம்பெறத் தவறிய மார்க் உட் இப்போது ஆஷஸ் தொடருக்குத் திரும்பியுள்ளார். சர்ரே அணியின் வில் ஜாக்ஸ் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் 2022-ல் 3-0 என்று பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வைட் வாஷ் செய்த இங்கிலாந்து அணியில் வில் ஜாக்ஸ் இருந்தார். அதன் பிறகு இப்போது மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி: 

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஹாரி புரூக் (துணை கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஓலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங், மார்க் வுட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து