முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அர்ஜுனிடம் ஆட்டமிழந்த சமித்

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2025      விளையாட்டு
Arjun-Tendulkar 2024-03-17

Source: provided

பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடகா லெவன் அணிக்கும் கோவா அணிக்கும் இடையிலான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ராகுல் திராவிட் மகன் சமித் திராவிட்டை ஆட்டமிழக்கச் செய்தது ராகுல் திராவிட்டை சச்சின் டெண்டுல்கர் வீழ்த்திய அரிதான நிகழ்வொன்றை நினைவூட்டுவதாக அமைந்தது.

டெண்டுல்கர் ஜூனியருக்கும் திராவிட் ஜூனியருக்கும் இடையிலான ஆட்டம் 3 பந்துகளே தாங்கின என்றாலும் சோஷியல் மீடியாவில் இந்த விஷயம் பெரிய பேசுபொருளானது. கர்நாடகாவின் வளரும் நட்சத்திரம், சமித் திராவிட் முதலில் அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 3வது பந்தில் அர்ஜுன் டெண்டுல்கர், சமித் திராவிட்டை வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பினார்.

______________________________________________________________________________________

ஐ.சி.சி.யின் அதிரடி நடவடிக்கை

சமீபகாலமாக அமெரிக்க அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது. அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசி விதிமுறைகளைத் தொடர்ச்சியாக மீறியதும், முறையான நிர்வாக அமைப்பைச் செயல்படுத்தத் தவறியதுமே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் என ஐசிசி தெரிவித்துள்ளது.

2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் ஐசிசியின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இருப்பினும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, இலங்கையில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்க பங்கேற்பதில் சிக்கல் இருக்காது.

______________________________________________________________________________________

சூர்யகுமார் கருத்துக்கு பதில்

பாகிஸ்தான் அணி குறித்த இந்திய கேப்டனின் கிண்டலான கருத்துக்கு அந்நாட்டின் வேகப் பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ஃரிடி பதிலளித்துள்ளார். முன்னதாக சூர்யகுமார் யாதவ், “இனிமேல் பாகிஸ்தான் அணியை எங்களது போட்டியாளர் எனக் கூறாதீர்கள். 7-8 அல்லது 10-9 என இருந்தால்தான் அது போட்டியே. 10-0 அல்லது 11-0 என இருந்தால் எப்படி சொல்ல முடியும்?” எனக் கிண்டலாக பேசியிருந்தார். இந்நிலையில், இது குறித்து ஷாஹீன் ஷா அல்ஃரிடி பேசியதாவது: அந்தக் கருத்து அவருடையது. அதை அவர் தாராளமாகச் சொல்லலாம். நாங்கள் இறுதிப் போட்டியில் சந்தித்தால், பார்க்கலாம் என்ன நடக்கிறதென.

நாங்கள் இங்கு ஆசிய கோப்பையை வெல்லவே வந்திருக்கிறோம். அதற்கான முழுமையான உழைப்பைக் கொடுப்பதில் கவனம் செலுத்துகிறோம் என்றார். பாகிஸ்தான் அணி இலங்கையை வென்று சூப்பர் 4 சுற்றில் நல்ல நிலையில் இருக்கிறது. அடுத்து வங்கதேசத்தை வென்றால், நிச்சயமாக இறுதிப் போட்டிக்கான வாய்பை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 

______________________________________________________________________________________

டிக்கி பேர்ட் காலமானார்

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல அம்பயர் ஹரோல்ட் டிக்கி பேர்ட், வயது முதிர்வால் காலமானார் (92). இங்கிலாந்தின் யார்க்ஷைரின் பர்ன்ஸ்லே பகுதியைச் சேர்ந்தவர் ஹரோல்ட் டிக்கி பேர்ட். இவர் 1956 முதல் 1965 வரை யார்க்ஷையர் மற்றும் லெய்செஸ்டர்ஷையர் அணிக்காக 93 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2 சதமடித்துள்ளார். 1970-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்ற துவங்கினார். அதன்பின், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு அம்பயராக அறிமுகமானார். 

அது முதல் 66 டெஸ்ட் போட்டி, 69 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றி உள்ளார். அதில் 3 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களும் அடங்கும். டிக்கி பேர்டின் துல்லியமான முடிவுகள் மற்றும் அவரது ஸ்டைலால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். கிரிக்கெட்டில் அவர் ஆற்றிய பணிக்காக பல விருதுகளை பெற்றுள்ளார். டிக்கி பேர்ட் மரணத்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து