முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த ஆண்டை காட்டிலும் 8.5 சதவீதம் அதிகம்: நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடி

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      இந்தியா
GST-2023-05-01

Source: provided

புதுடெல்லி : ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (நவம்பர் ) ரூ.1.82 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாகவும், கடந்த ஆண்டுவுடன் ஒப்பிடுகையில் இது 8.5 சதவீதம் அதிகம் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய ஜி.எஸ்.டி. வசூல் ரூ.34,141 கோடியாகவும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.43,047 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.91,828 கோடியாகவும், செஸ் ரூ.13,253 கோடியாகவும் இருந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இது 8.5 சதவிகிதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மூன்றாவது அதிகபட்ச ஜி.எஸ்.டி. வருவாயாகும்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் ரூ.2.10 லட்சம் கோடியும், கடந்த அக்டோபரில் ரூ. 1.87 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம் விழாக் காலம் என்பதால் பொருள்களுக்கான தேவை உயர்ந்து, ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்திருந்த நிலையில், கடந்த மாதம் ஜி.எஸ்.டி. வசூல் சற்று குறைந்திருந்தாலும், 9 சதவீத வருடாந்திர வளர்ச்சியுடன் 2-வது சிறந்த ஜி.எஸ்.டி. வசூலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து