முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. வாரியத்திற்கு புதிய தலைவர்

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      விளையாட்டு
Australia 2024-03-27

Source: provided

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான நிக் ஹாக்லியின் பதவிக்காலம் 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனையொட்டி புதிய தலைமை நிர்வாகியை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய வாரியம் இறங்கியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டாட் கிரீன்பெர்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிக் ஹாக்லியின் பதிவிக்காலம் முடிவடைந்தவுடன் இவர் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

________________________________________________________________________

பணக்கார கிரிக்கெட் வீரர் ஓய்வு 

கிரிக்கெட் உலகின் பணக்கார வீரராக அறியப்படுவர் இந்தியாவை சேர்ந்த ஆர்யமான் பிர்லா (வயது 22). இவர் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆவார். முதல் தர கிரிக்கெட்டில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடியுள்ள இவர் 9 போட்டிகளில் 414 ரன்கள் அடித்துள்ளார். இதில் இரண்டு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும். 

2018 ஐ.பி.எல். ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.30 லட்சத்துக்கு வாங்கியது. இருப்பினும் அவர் 2019-ல் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அதன்பின் களத்திற்கு திரும்பாத அவர் இன்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ. 70,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து