Idhayam Matrimony

உத்தர பிரதேசம், வாரணாசியில் பிப். 15-ல் தொடங்குகிறது காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சி: அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      இந்தியா
Dharmendra Pradhan 2023 06 21

புது டில்லி, மூன்றாம் ஆண்டு காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சி, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிப்ரவரி 15 முதல் 24 வரை நடைபெறவுள்ளது என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் காசி இடையிலான வரலாற்று ரீதியிலான தொடர்புகளைக் கொண்டாடும் வகையில், முதல் முறையாக காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சி கடந்த 2022, நவம்பர் 19-ம் தேதி தொடங்கி ஒரு மாத காலத்துக்கு நடைபெற்றது. பின்னர், 2023, டிசம்பரில் இரண்டாம் ஆண்டு காசி-தமிழ் சங்கமம் நடைபெற்றது.

இந்நிலையில், டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி 10 நாள்களுக்கு காசி-தமிழ் சங்கமம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க சென்னை ஐஐடி-யின் ந்ஹள்ட்ண்ற்ஹம்ண்ப்.ண்ண்ற்ம்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதள பக்கத்தில் பிப்ரவரி 1-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு, காசி தமிழ் சங்கமம் மகா கும்பமேளா நிகழ்ச்சியுடன் ஒன்று சேர்ந்து நடைபெறுவதால் சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அத்துடன், அயோத்தியில் ஸ்ரீபாலராமரின் ‘பிராண பிரதிஷ்டைக்கு’ பிறகு நடைபெறும் முதல் சங்கம நிகழ்ச்சி இதுவாகும். இந்நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முழு அளவில் பங்கேற்க வேண்டும் என்று தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் வி.காமகோடி, ‘தமிழகத்தில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பர். இவர்கள் சம எண்ணிக்கையில் 5 குழுக்களாக அழைத்துச் செல்லப்படுவர். மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் 200 தமிழ் மாணவர்களும் இடம்பெறுவர். அவர்கள் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தியை பார்வையிட்டு, நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்’ என்றார்.

தற்போதைய காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சியில் சித்த மருத்துவம், தமிழ் இலக்கியம் மற்றும் நாட்டின் கலாசார ஒற்றுமைக்கு அகத்திய மாமுனிவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகள் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன. இதுகுறித்த கண்காட்சி, கருத்தரங்குகள், பயிலரங்குகள், புத்தக வெளியீடு போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து