முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.ஐ. பயன்பாடு குறித்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுரை

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      இந்தியா
election-2024-08-16

Source: provided

புதுடில்லி : தோ்தல் பிரசாரங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பம் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வு அதிகரிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம்  அறிவுறுத்தியது.

தோ்தல் பிரசாரங்களில் ஏ.ஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், வாக்காளா்களின் கருத்தை பாதிக்கும் அதன் திறன் குறித்து தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் அண்மையில் எச்சரித்தாா்.

இந்நிலையில், தோ்தல் பிரசாரங்களில் ஏ.ஐ பயன்பாடு குறித்து தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

‘ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட புகைப் படங்கள், விடியோக்கள், அல்லது பிற ஆடியோக்களில், ‘ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டது’, ‘டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டது’ அல்லது ‘செயற்கை உள்ளடக்கம் கொண்டது’ போன்ற வாசகங்கள் குறியீடுகள் (லேபிள்) மூலம் தெளிவாக இடம்பெற வேண்டும்.

ஏ.ஐ உள்ளடக்கம் பயன்படுத்தப்படும் இடங்களில், பிரசார விளம்பரங்கள் அல்லது விளம்பர உள்ளடக்கத்தை சமூக ஊடகங்களில் வெளியிடும்போதும் அரசியல் கட்சிகள் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின் போதும், சமூக ஊடக தளங்களின் பொறுப்பான மற்றும் நெறிமுறை பயன்பாட்டுக்கான வழிகாட்டுதல்களை தோ்தல் ஆணையம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து