முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய ராணுவத்தில் இணைந்து போராடிய 12 இந்தியர்கள் பலி : மத்திய அரசு தகவல்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : உக்ரைனில் ரஷ்ய ராணுவத்திற்காக போராடி சுமார் 12 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனிடையே இந்த போரில் உக்ரைன் எல்லைகளில் போரிடுவதற்கு ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு உதவி செய்வதற்காக இந்தியர்கள் சிலர் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்துடன் இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ரஷ்ய ராணுவத்தில் இருந்து அனைத்து இந்தியர்களையும் விரைவில் வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையில், சமீபத்தில் ரஷ்ய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட கேரளாவை சேர்ந்த நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ரஷ்ய ராணுவத்தில் இணைந்து போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"இன்றைய நிலவரப்படி, ரஷ்ய ராணுவத்தில் 126 இந்தியர்கள் இணைந்து பணியாற்றி வருவதாக தகவல் தெரியவந்துள்ளது. இதில் 96 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இன்னும் 18 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் உள்ளனர், அவர்களில் 16 பேர் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. உக்ரைனில் ரஷ்ய ராணுவத்திற்காக போராடி சுமார் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து