முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம்: அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2025      தமிழகம்
OPS 2024-11-17

Source: provided

சென்னை: தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள், மாணவ, மாணவியர்களுக்கும்,   சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் இன்றியமையாததாக விளங்குவது பொதுப் போக்குவரத்து. இந்தப் பணியை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக செய்து வருகின்றன.

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்புடன் செயல்படுவதற்கு அடித்தளமாக விளங்குபவர்கள் அங்கு பணியுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தான். இந்தத் தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தம் காலாவதி ஆகி ஓராண்டு கடந்த நிலையிலும், புதிய ஊதிய ஒப்பந்தம் இன்னும் போடப்படவில்லை. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை  ஆரம்ப கட்ட நிலையிலேயே உள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும்,  சில தொழிற்சங்கங்கள் தங்கள் தொழிற்சங்கம் சார்பில் அதிக நபர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும், போக்குவரத்து தொழிற்சங்கம் தொடர்பான வழக்கு சுப்ரம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாகவும், இதுபோன்ற பிரச்சனைகளால் புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தள்ளிப் போவதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்படுவதற்கு இவையெல்லாம் காரணங்களாக சொல்லப்பட்டாலும், அனைத்து தொழிற் சங்கங்களையும் அழைத்துப் பேசி போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமை. மேலும், வழக்கு சுப்ரம் கோர்ட்டில் நிலுவையில் இருந்தாலும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை.

எனவே, முதல்வர்  இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து