முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவிப்பு

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2025      விளையாட்டு
8-Ram-59

Source: provided

காலே: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவித்துள்ளது.

2-வது டெஸ்ட்...

இலங்கை- ஆஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2-வது போட்டி காலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 257 ரன்கள் எடுத்து ஆலஅவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க், மேத்யூ குனேமான், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

ஆஸி. 414 ரன்கள்...

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்மித், அலெக்ஸ் கேரி அபாரமாக விளையாடி சதம் விளாசினர். 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்திருந்தது. ஸ்மித் 120 ரன்களுடனம், கேரி 139 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்மித் 131 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி 156 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் ஆஸ்திரேலியா விக்கெட்டுகள் மளமளவென சரிய 414 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இலங்கை அணியில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இலங்கை 211/8...

பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களான நிஷாங்கா 8 ரன்னிலும், கருணாரத்னே 14 ரன்னிலும், சண்டிமல் 12 ரன்னிலும் வெளியேறினார். ஆனால் மேத்யூஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவருடன் குசால் மெண்டிஸ் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  

54 ரன்கள் முன்னிலை... 

இலங்கை அணி நேற்றைய 3ம் நாள் முடிவில் 62.1 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இலங்கை தற்போது வரை 54 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை தரப்பில் குசல் மெண்டிஸ் 48 ரன்னுடன் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா தரப்பில் குனமென் 4 விக்கெட்டும், நாதன் லயன் 3 விக்கெட்டும், பியூ வெப்ஸ்டர் 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து