எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அமலாக்கத் துறை உள்நோக்கத்தோடு, ஆதாரங்கள் ஏதுமின்றிவெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதாகவும் உரிய சட்டநடவடிக்கை எடுப்பேன் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்.வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-
சென்னை அமலாக்க இயக்குநரகம் கடந்த 6-ம்தேதி சென்னை தமிழ்நாடுமாநில வாணிபக் கழக தலைமை அலுவலகம் உட்பட தமிழகத்தின் பல்வேறுஇடங்களில் சோதனை நடத்தியது.அதில் மார்ச் 13 ம்தேதி மாலை சோதனை தொடர்பாக வெளியிட்ட செய்திகுறிப்பில் பல்வேறு முதல் தகவல் அறிக்கைகள், பல்வேறு பிரிவுகளில்பதியப்பட்டதாக குறிப்பிட்டுள்ள நிலையில், எந்த முதல் தகவல் அறிக்கை எந்தஆண்டில் பதிவு செய்யப்பட்டது என்ற விவரங்கள் குறிப்பிட்டுதெரிவிக்கப்படவில்லை. கடைப்பணியாளர் களின் பணியிட மாறுதல் உத்தரவுகள், அவர்களின் குடும்பசூழ்நிலை, மருத்துவ காரணங்கள், பணியில் தவறு செய்யும் பணியாளர்களைவிடுவித்து அப்பணியிடங்களுக்கு மாற்றுப் பணியாளர்களை நியமித்தல்,மனமொத்த மாறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பணியிடமாறுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மூடப்பட்ட கடைகளில்பணியாற்றிய 2,157 கடைப்பணியாளர்களுக்கு 2023 ஆம் ஆண்டு கலந்தாய்வுமூலம் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சரியானமுறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி பிப்ரவரி 2023-இல் கோரப்பட்டு, பெறப்பட்டஒப்பந்தப்புள்ளிகளில் குறைவான தொகை கோரிய ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம்இறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டது. கே.ஒய்.சி. விவரங்கள், வங்கி வரைவோலைகள் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களின் அனைத்துவிவரங்களும் சரிபார்க்கப்பட்ட பின்பே ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டது.இந்த ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்நிறுவனத்திற்கும் மற்றும் அரசிற்கும் வரவேண்டிய வருவாய் கணக்கிடப்பட்டுஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சில போக்குவரத்து ஒப்பந்தம்தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில்உள்ளன. எனவே இதில் முறைகேடுகள் எதுவுமில்லை. கடந்த காலங்களில் நடைபெற்ற மதுக்கூட ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள்அனைத்தும் ஒப்பந்தப்புள்ளி பெட்டியில் சமர்ப்பிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.ஒவ்வொரு பாரிலும் குறுமத் தொகை முறையாகநிர்ணயிக்கப்பட்டு குறுமத் தொகைக்கு மேல் கூடுதலாக கேட்கப்படுபவர்களுக்கு பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே, 2020-2021 ஆம் ஆண்டுநடைபெற்ற பார் ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் நடைபெற்றன. 2023 டிசம்பர் மாதம் மாவட்ட மேலாளரால் பார் ஒப்பந்தங்கள் ஆன்லன் மூலமாக வரவேற்கப்பட்டு, அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரிடம் நேர்முக உதவியாளர் (பொது), உதவிஆணையர் (கலால்) மற்றும் மாவட்ட மேலாளர், தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் ஆகியோர் அடங்கிய மாவட்ட கலைக்டரால் அமைக்கப்பட்டகூராய்வுக் குழுவால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு கலைக்டர் மற்றும் விண்ணப்பதாரர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் திறக்கப்பட்டு இறுதிசெய்யப்பட்டன.
இதுவரை ஆன்லைன் மூலமாக பார் ஒப்பந்தநடவடிக்கைகள் மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ளன. சட்ட விதிகளுக்குஉட்பட்டே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்தமுறை மூலம் டாஸ்மாக்நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஒரு வணிக நிறுவனம். வணிகநோக்கில்மதுபான நிறுவனங்களிடமிருந்து உயரதிகாரிகளுக்குப் பல கோரிக்கைகள்வைக்கப்பட்டாலும், அக்கோரிக்கைகள் சட்ட, திட்ட விதிமுறைக்களுக்குட்பட்டேபரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மாநிலவாணிபக் கழகம் எவ்வித பாரபட்சமும் இன்றி உரிய வழிமுறையின் அடிப்படையில் ஒவ்வொரு மதுபான வகையின் மூன்று மாத விற்பனை அளவினைகணக்கிட்டும், அவற்றுடன் கடைசி மாத விற்பனை அளவினை கணக்கிட்டும்,அதனடிப்படையிலான கொள்முதல் வெளிபடையானஆன்லைனில்உரிய வழிமுறையில் மட்டுமே வழங்கப்படுகிறது. மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் மதுபுட்டிகள் தயாரிப்புநிறுவனங்களுக்கிடையே பணபரிமாற்றங்கள்நடைபெற்றதாக தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் அந்த இரு நிறுவனங்களுக்கு இடையேயானது எனினும், இந்த பணப்பரிமாற்றங்களைப் பயன்படுத்தி தமிழ்நாடுமாநில வாணிப நிறுவனத்திடம் இருந்து கூடுதல் கொள்முதலைப்பெற்றதாக தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. மேலும், இதில் ரூபாய் 1000 கோடிமுறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு எவ்வித முகாந்திரமும்இல்லை. இவ்வாறு உள்நோக்கத்தோடு ஆதாரங்கள் ஏதுமின்றிமுன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதோடு,இதுதொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறி்யுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் உருவாகிறது மேலும் ஒரு புயல் சின்னம் : 8 மாவட்டங்களில் இன்று கனமழை
17 Nov 2025சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற 22-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: வரும் 24-ம் தேதி கொடியேற்றம்
17 Nov 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
காந்தா திரைவிமர்சனம்
17 Nov 20251950களின் காலக்கட்டத்தில் சேலம் மாடன் ஸ்டுடியோவில் பிரபல நடிகர் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக்க் கொண்டு உருவ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2025.
17 Nov 2025 -
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆண்பாவம் பொல்லாதது படக்குழு
17 Nov 2025டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.
-
திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
17 Nov 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு செய்யப்படுகிறது.
-
வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது : உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
17 Nov 2025சென்னை : வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பயன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Nov 2025சென்னை, ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனா் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சவுதியில் பேருந்து விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
17 Nov 2025துபாய் : மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் 45 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
சிசு படத்தின் 2-ஆம் பாகம் ரோட் டு ரிவெஞ்ச்
17 Nov 2025ஜல்மாரி லாண்டர் இயக்கத்தில் இம்மாதம் 21 ந்தேதியன்று வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ரோட் டு ரிவெஞ்ச்’.
-
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவிமர்சனம்
17 Nov 2025பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், தன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
-
இயற்கை விவசாயிகள் மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகை
17 Nov 2025கோவை : கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வருகிறார்.
-
ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர்
17 Nov 2025சென்னை : ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உயர்கல்வித்துறை அ
-
ரஷ்யாவிடம் 25,500 கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா
17 Nov 2025புதுடெல்லி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியது.
-
42 இந்தியர்கள் உயிரிழப்பு : பிரதமர் மோடி இரங்கல்
17 Nov 2025புதுடெல்லி : சவுதி அரேபியாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 45 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம்
17 Nov 2025திஸ்பூர் : அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கப்படவுள்ளது.
-
வரும் 2028-ல் சந்திரயான்-4 ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
17 Nov 2025கொல்கத்தா : 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் தெரிவித்தார்.
-
கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வழக்கு
17 Nov 2025சென்னை : பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்
17 Nov 2025பாட்னா, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார். கவர்னர் முகமது கானிடம் தனத் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
-
உண்மை சம்பவத்தை சொல்லும் தீயவர் குலை நடுங்க
17 Nov 2025அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’.
-
டெல்லி கார் வெடி குண்டு விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
17 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடி குண்டு விபத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
-
இன்று 89-வது நினைவு நாள்: வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை
17 Nov 2025சென்னை : வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளை முன்னிட்டு அரவது சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
-
தீர்ப்பு ஒரு தலைபட்சமானது: மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா விமர்சனம்
17 Nov 2025டாக்கா: வங்காள தேச முன்னாள் பிரதமர் மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா கருத்து தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ தகவல் மையங்கள்: அமைச்சர்
17 Nov 2025சென்னை, சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையங்கள் செயல்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றம்
17 Nov 2025செம்பரம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து1,200 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


