எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஈரோடு: ஈரோட்டில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் கிச்சிபாளையம் சுந்தர்தெருவை சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்கியா (வயது 35). இவருடைய மனைவி சரண்யா (28). வக்கீல். பிரபல ரவுடியாக வலம் வந்த ஜானின் மீது சேலம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை, வழிப்பறி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சேலத்தில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட ஜான் தனது மனைவியுடன் திருப்பூருக்கு புறப்பட்டார் ஈரோடு மாவட்டம் நசியனூர் முள்ளம்பட்டிபிரிவில் கார் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு கார் ஜானின் கார் மீது பயங்கரமாக மோதியது. அப்போது அந்த காரில் இருந்து மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஜானை சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா, ஜானை காப்பாற்ற முயன்றார். இதில் அவர் மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அதன்பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து அவர்கள் வந்த காரிலேயே தப்பித்து சென்றது.
இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட ஜானின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே போலீசார் கொலையாளிகளை பச்சபாளிமேடு பகுதியில் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் போலீசாரை தாக்க முயன்றதில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டு ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் தற்காப்புக்காக அவர்களை நோக்கி போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோர் துப்பாக்கியால் காலில் சுட்டனர்.
இதில் காயம் அடைந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் காயமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டரும், ஏட்டும் சிகிச்சைக்காக அங்கு சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோட்டில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தைச் சேர்ந்த பார்த்திபன், அழகரசன், சேதுவாசன், பெரியசாமி, சிவக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஏற்கெனவே 4 பேர் பிடிபட்டநிலையில், இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 9 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


