எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நெல்லை : தமிழக சட்டமன்றம் மரபுப்படி நடத்தப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. நிலப்பிரச்சினை, குடும்ப பிரச்சனை உள்ளிட்ட விரோதத்தின் காரணமாகவே கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாராளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்வதால் ஏற்படும் பாதிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே கணித்து பாராளுமன்றம் மற்றும் அனைத்து கட்சி கூட்டம் என இந்த விவகாரத்தை பேசி அனைத்தையும் நடத்திக் காட்டி உள்ளார். இந்தியாவின் மீது அக்கறை கொண்ட தமிழக முதல்வர் கூட்டாட்சி தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டு முன் யோசனையோடு செயல்படும் முதல்-அமைச்சரின் செயலை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே வரவேற்றுள்ளது.
நிச்சயமாக தொகுதி மறு வரையறை பிரச்சினையில் நல்ல முடிவு வரும். சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு முழு அனுமதி கொடுத்து ஜனநாயக ரீதியில் வழிநடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யாரையும் பாராமல் ஜனநாயக ரீதியில் சட்டசபை வழிநடத்தப்படுகிறது. தமிழக சட்டமன்றம் சட்ட விதிப்படி மரபுப்படி நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


