முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்ராமா - விமர்சனம்

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      சினிமா
Trauma-Review 2025-03-24

Source: provided

திருமணம் ஆகி பல ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமாகும் சாந்தினிக்கு, ஒரு மர்ம போன் வருகிறது. தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா தனது கணவர் விவேக் பிரசன்னா இல்லை என்று சொல்லும் அந்த மர்ம நபர் அதே நம்பரிலிருந்து வீடியோ ஒன்றையும்  அனுப்புகிறார். இது ஒரு கதை. இன்னொரு கதை. காதலனால் கர்ப்பமடையும் பூர்ணிமா ரவி தன் காதலனின் உண்மையான முகத்தை தெரிந்து கொண்டு அவருடன் வாழவே கூடாது, என்ற முடிவுக்கு வருகிறார். இந்த இரண்டு கதைகளிலும் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் அதில் இருந்து மீண்டார்களா?, இதன் பின்னணியில் இருப்பவர் யார்? என்ற முடிச்சை அவிழ்க்கும் படைப்புதான் ட்ராமா. கதையின் நாயகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, எதார்த்தமான நடிப்பை வழக்கம் போல வழங்கி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சாந்தினி, பல இடங்களில் அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இளம் நாயகனாக வரும் பிரதோஷ், அவரது காதலி பூர்ணிமா ரவி இருவரும் தங்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் நாக், சஞ்ஜீவ், பிரதீப் கே.விஜயன், என பலரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.ராஜ்பிரதாப் இசையும், அஜித் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. எழுதி இயக்கியிருக்கும் தம்பிதுரை மாரியப்பன், மருத்துவ பின்னணியில் நடக்கும் குற்ற செயல்களை தோலுறித்துக் காட்டியதுடன், காட்சிக்கு காட்சி எதிர்பாராத திருப்பங்களைக் கொடுத்து பார்வையாளர்களை படத்துடன் ஒன்ற வைத்துள்ளார். மொத்தத்தில், ட்ராமாவை ஒரு முறை தாராளமாக பார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து