முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் ரூ.5,258 கோடியில் பட்ஜெட்

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      ஆன்மிகம்
Tirupati-2023-05-01

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரவு செலவுடன் கூடிய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொதுக்கூட்டம் நேற்று முன்திம் நடைபெற்றது.  அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமை தாங்கினார். இதில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ.5,258.68 கோடியில் தாக்கல் செய்யப்பட்டது. ரூ.5,258.68 கோடியில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அறங்காவலர் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூலம் கடந்த ஆண்டு ரூ.1,671 கோடி கிடைத்தது.

அதேபோல் போல், இந்த ஆண்டு ரூ.1,729 கோடி காணிக்கை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளில் வைத்திருக்கும் நிரந்தர வைப்பு நிதிகளுக்கு வட்டியாக ரூ.1,253 கோடி கிடைத்த நிலையில், வரும் நிதியாண்டில் ரூ.1,310 கோடியும், கடந்த ஆண்டு லட்டு உள்ளிட்ட பிரசாத விற்பனை மூலம் ரூ.550 கோடி வருவாய் கிடைத்த நிலையில், வரும் ஆண்டில் ரூ.600 கோடியும், தரிசன டிக்கட்டுகள் விற்பனை மூலம் ரூ.305 கோடி வருவாய் கிடைத்த நிலையில், ரூ.310 கோடி வரும் ஆண்டில் வருமானமாக கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து