எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சட்டசபையின் நேற்றைய கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் எழிலன்: நிலத்தை வாங்கும் போதோ, விற்கும் போதோ வழிகாட்டி மதிப்பு மற்றும் சந்தை மதிப்புக்கு இடையே வித்தியாசம் இருப்பதால் சில பேர் நிலத்தை விற்க முடியாமலும் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, விவசாய நஞ்சை நிலங்கள், மானாவாரி நிலங்கள் மற்றும் தரிசு நிலங்கள் ஆகியவற்றின் வழிகாட்டு மதிப்பு முரண்பாடுகளை சீர்படுத்தும் நோக்கிலும், உண்மையான சொத்து மதிப்பினை ஆய்வு செய்யவும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்பு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் அத்தகையை இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு சென்று, வழிகாட்டு மதிப்பை ஆராய்ந்து பதிவுத்துறை தலைவருக்கு அறிக்கை அளிக்கும்.
அந்த அறிக்கையானது மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையிலான துணைக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்ட பின்னால் பதிவுத்துறை தலைவர் தலைமையிலான மையக்குழுவின் ஜெனரல் வால்யூவேஷன் கமிட்டி ஒப்புதல் பெறப்பட்டு முரண்பாடுகள் களையப்பட்டு வழிகாட்டி மதிப்புகள் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் எழிலன்: திருமணம் என்பது மானுட ஒப்பந்தம் என்று சொன்னார் புத்தர். இந்த அடிப்படையில் புரோகித, ஜாதி, சடங்குகள் மறுப்பு என்று சுயமரியாதை திருமணத்தை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார்.
1925 முதல் நடந்த சுயமரியா தைதிருமணங்களுக்கு 1968 இல் தமிழ்நாடு அரசால் அனைத்து சுயமரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் தந்தவர் அண்ணா. 2020-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாட்டில் நிறைவேற்றிய சுயமரியாதை திருமணத்தை பாராட்டி பெற்றோர்கள் அனுமதி தேவையில்லை, பொது வெளியில் திருமணம் செய்ய தேவையில்லை. உகந்த சான்றிதழ்கள் கொடுத்தால் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என சட்ட முன் நடவடிக்கை கொடுத்துள்ளது. ஆனாலும், சுயமரியாதை திருமணம் செய்வதற்கு சில சார்பதிவாளர்கள் சமூக சூழல் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு இடர்பாடுகளை செய்வதாகவும், ஆணோ, பெண்ணோ பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றால் பலவகையான தடைகளை ஏற்படுத்தும் நிலை ஏற்படுகிறது. இந்த வரலாற்று பின்னணியும் சமூக பின்னணியும் குறித்து சார் பதிவாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். திருமணம் முடித்தவர்கள் ஆன்லைன் மூலம் விசா பிரச்சனையின்றி வெளிநாட்டிற்கு செல்வதற்கு ஏதுவாக ஆன்லைன் மூலம் திருமண பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, சுயமரியாதை திருமணம் குறித்து 1955-ம் ஆண்டு இந்து திருமண பதிவு சட்டத்தின்படி சுயமரியாதை திருமணம் சேர்க்கப்பட்டு தற்போது வரை சார்பதிவாளர் அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2018ம் ஆண்டு முதல் தற்போது வரை 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுயமரியாதை திருமணம் குறித்து பதிவுத்துறை பயிற்சி நிலையம் மூலமாக பதிவுத்துறை அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறை இணையதள பக்கத்தில் உள் சென்று திருமண பதிவிற்கு தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அதற்கு உரிய கட்டணத்தை செலுத்திய பின்னர் விண்ணப்பம் உருவாக்கப்படும். அதனை அச்சு பிரிதி எடுத்து திருமண பதிவிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். பின்னர் இணையதளம் வழியாக பதிவு செய்வதற்கான நாள் மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்து ஒப்புகை சீட்டை பெறலாம். மேலும், பதிவு செய்யப்பட்ட திருமண சான்றிதழ்கள் திருத்தம் தேவைப்படின் பதிவு துறை அலுவலகங்களுக்கு நேரிலே வராமல் இணையம் வழியாகவே விண்ணப்பித்து திருத்திய சான்றுகளை பெறும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |