முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் டில்லி திரும்பினர்

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      தமிழகம்
Kashmir-2 2025-04-22

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் டில்லி திரும்பினர்.

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

தாக்குதலில் பலியான 26 பேரில் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தலா இருவர், உத்தரப் பிரதேசம், ஹரியானா, குஜராத்தைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். அதேபோல், உயிரிழந்த 2 வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, அங்கு சிக்கியுள்ள 35 தமிழர்கள் தங்களுடைய பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு டில்லி திரும்பியுள்ளனர்.

இவர்கள் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 35 தமிழர்களும் நேற்று (ஏப். 23) இரவு சென்னை திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து