முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹல்காம் முக்கிய குற்றவாளி மூசா பாகிஸ்தான் முன்னாள் ராணுவ வீரர்: அதிர்ச்சி தகவல் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      இந்தியா
Musa-2025-04-29

ஸ்ரீநகர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா  பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று   தெரியவந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேரைக் கொன்றவர்களின் புகைப்படங்களை, காயமடைந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வரைந்து போலீசார் வெளியிட்டனர். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த சுலைமான் என்ற ஹாஷிம் மூசா மற்றும் தல்ஹா பாய் என்ற அலி பாய் என்பதும் மற்றொருவர் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த அபித் ஹுசைன் தோக்கர் என்பதும் கண்டறியப்பட்டது.

 இந்த நிலையில், ஹாஷிம் மூசா குறித்த அதிர்ச்சித் தகவல்கள் தற்போது விசாரணையில் வெளியாகியுள்ளது. ஹாஷிம் மூசா என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் படையில் பணியாற்றியவர். பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து வெளிவந்த அவர், தடைசெய்யப்பட்ட லஷ்கர் - ஏ - தொய்பாவில் இணைந்துள்ளார். காஷ்மீரில் சதித்திட்டங்களுக்கு வலுசேர்க்கும் விதத்தில், லஷ்கர் - ஏ - தொய்பாவில் இணைய பாகிஸ்தான் ராணுவமே ஹாஷிம் மூசாவிடம் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பயிற்சி பெற்ற சிறப்புப் படை வீரரான மூசா, போர் மற்றும் ரகசிய நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இத்தகைய பயிற்சி பெற்றவர்கள் அதிநவீன ஆயுதங்களை கையாள்வதில் திறம்பட செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூசா குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து