Idhayam Matrimony

ஹொசைன் ஷான்டோ சதம்: வங்காளதேசம் - இலங்கை முதல் டெஸ்ட் போட்டி டிரா

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      விளையாட்டு
test-match

Source: provided

காலே: காலேவில் நடந்த  வங்கதேசம் - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

வங்கதேசம் பேட்டிங்...

வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

495 ரன்கள்....

அதன்படி, வங்கதேச அணி முதலில் களமிறங்கியது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 148 ரன்னும், முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்னும், லிட்டன் தாஸ் 90 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 495 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், மிலன் பிரியநாத் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

நிசங்கா சதம்...

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 485 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி சதம் கடந்து 187 ரன்னில் அவுட்டானார். தினேஷ் சண்டிமால் அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார். கமிந்து மெண்டிஸ் 87 ரன்னில் ஆட்டமிழந்தார், வங்கதேசம் அணி சார்பில் நயீம் ஹாசன் 5 விக்கெட்டும், ஹசன் மஹ்முது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து ஆடிய வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹொசைன் சான்டோ மீண்டும் சதமடித்தார். ஷட்மான் இஸ்லாம் அரை சதமடித்து 76 ரன்கள் எடுத்தார். முஷ்பிகுர் ரஹ்மான் 49 ரன்னில் அவுட்டானார். 

டிராவில் முடிந்தது...

296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து, காலே டெஸ்ட் டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகனாக வங்கதேசத்தின் ஹொசைன் ஷாண்டோ அறிவிக்கப்பட்டார். இலங்கையில் ஏஞ்சலோ மேத்யூஸ் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து