முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் இடைவிடாது ஒலித்த சைரன்

திங்கட்கிழமை, 23 ஜூன் 2025      உலகம்
Israel

டெல் அவிவ், இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் புதிதாக ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் பல நகரங்களில் ஓயாமல் சைரன் சத்தங்கள் ஒலிக்கின்றன. 

ஈரான் - இஸ்ரேல் இடையே 11-வது நாளாக மோதல் நீடிக்கும் நிலையில், நேற்றும் ஈரானிலிருந்து ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் ஏவுகணைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் சைரன்கள் ஒலித்தன. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘சிறிது நேரத்திற்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இஸ்ரேல் முழுவதும் ஜெருசலேம் உள்பட பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்தன" என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இஸ்ரேலின் அஷ்டோட், லாச்சிஷ் ஆகிய இடங்களில் தாக்குதல்கள் நடந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்டோட் பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஜெருசலேம் நகருக்கு தெற்கே உள்ள லாச்சிஷ் பகுதியில் நடந்த தாக்குதலால் கடும் சேதம் ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. ஜெருசலேம் பகுதியில் மிகவும் சத்தத்துடன் குண்டு வெடிப்பு ஒலிகள் கேட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. ஜெருசலேம் மீது ஏவுகணைகள் உயரமாக பறப்பதையும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தியாக்கியுள்ளன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து