Idhayam Matrimony

போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது சென்னை போலீசார் நடவடிக்கை

திங்கட்கிழமை, 23 ஜூன் 2025      சினிமா      தமிழகம்
Srikanth-2025-06-23

சென்னை, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை - நுங்கம்பாக்கம் போலீசார்  கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த பிரசாத் என்பவரிடமிருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிராம் போதைப் பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் 40 முறைக்கு மேல் வாங்கிப் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கான பணப்பரிவர்த்தனை கூகுள் பே மூலம் நடந்துள்ளதாகவும் தெரிகிறது.

இது குறித்து விசாரணை நடத்திய சென்னை - நுங்கம்பாக்கம் போலீசார் , நேற்று காலை 8 மணிக்கு, நடிகர் ஸ்ரீகாந்த்தை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, அவருடைய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் , நடிகர் ஸ்ரீகாந்த்தை கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த போதைப்பொருள் வழக்கில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? திரையுலகைச் சேர்ந்தவர்கள் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார்  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் வழக்கில் ஏற்கெனவே பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார்  நடத்திய விசாரணையில், போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து