Idhayam Matrimony

புகையிலை இல்லா இளைஞர் நலன் இயக்கம்: புதுச்சேரிக்கு மத்திய அரசின் விருது

திங்கட்கிழமை, 23 ஜூன் 2025      தமிழகம்
Pudhucherry-2023-03-23

புதுச்சேரி, புகையிலை இல்லா இளைஞர் நலன் இயக்கம் 2.0-ஐ சிறப்பாக செயல்படுத்தியதற்காக புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விருது வழங்கியுள்ளது.

இந்த விருதை பெற்ற புதுச்சேரி அரசு - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்ட அதிகாரி டாக்டர் கோவிந்த ராஜன், திட்டத்தின் மாநில முதன்மை அதிகாரி டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து விருது மற்றும் சான்றிதழைக் காண்பித்து  வாழ்த்துப் பெற்றனர். அப்போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

விருது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “2024-25-ம் ஆண்டில் புகையிலை இல்லா இளைஞர் நலன் இயக்கம் 2.0-இன் கீழ் கல்வி நிறுவனங்களின் அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக மஞ்சள் கோடு பிரச்சாரங்களை மேற்கொண்டோம். அத்துடன் கல்வி நிறுவனங்களை புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுத்தோம். காவல் துறையுடன் இணைந்து கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று சோதனை தீவிரமாக நடத்தினோம்.

 மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 20 புதிய புகையிலைப் பழக்கம் மீட்பு மையங்களை நிறுவினோம். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து விழிப்புணர்வுப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டோம். இதற்காக புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது" என்று அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து