முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் 6 விமான நிலையங்கள் மீது தாக்குதல்: 15 போர் விமானங்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

திங்கட்கிழமை, 23 ஜூன் 2025      உலகம்
Nedanyagu 2024-12-10

Source: provided

டெல் அவிவ் : ஈரானில் உள்ள 6 ராணுவ விமான நிலையங்களைத் தாக்கியதுடன், 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள ஆறு விமான நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பதிவில், ‘ ஈரானில் உள்ள மெராபாத், மஷாத் மற்றும் டெஸ்ஃபுல் உட்பட 6 விமான நிலையங்கள், 15 ஈரானிய விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அழித்தோம். இந்தத் தாக்குதல்கள் மூலம் ஈரானில் உள்ள விமான ஓடுபாதைகள், நிலத்தடி பதுங்கு குழிகள், எரிபொருள் நிரப்பும் விமானம் மற்றும் எஃப்-14, எஃப்-5 மற்றும் ஏஹெச்-1 உள்ளிட்ட விமானங்கள் கடும் சேதமடைந்தன. இந்த விமான நிலையங்களின் இயங்கும் திறனை எங்கள் விமானப்படை சீர்குலைத்தது” எனத் தெரிவிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, டெல் அவிவ் மற்றும் ஹைஃபா போன்ற முக்கிய இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் இத்தகைய தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து