முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது: நீட் தேர்வுமுறையே ஒரு ஊழல்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 23 ஜூன் 2025      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, நீட் தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும், முறைகேடுகளும்தான் என்று குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுமுறையே ஒரு ஊழல்தான் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

சந்தையைப் பற்றியது... 

மராட்டியத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ள செய்தியை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- நீட் தேர்வு தகுதியைப் பற்றியது அல்ல, சந்தையைப் பற்றியது மட்டுமே என்பதை நிரூபிக்கும் மற்றொரு வழக்கு. அதனால்தான் நாங்கள் சத்தமாகவும் தெளிவாகவும் சொல்கிறோம், நீட் தேர்வு நீட்டாக இல்லை, அதற்கான காரணங்கள் எங்களிடம் உள்ளன. 

குளறுபடி-முறைகேடு...

தரம், தரம் என்றார்கள். நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் எனும் தேர்வுமுறையே ஒரு ஊழல்தான். அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான். நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல். ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. மாநாடுகளில் காட்சி பொருளாக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து