முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்வு : அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2025      தமிழகம்
Sivashankar 2023-05-08

Source: provided

சென்னை : பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல், மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளவாறு பெரிய தொழில் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

வீடுகளுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டபோதிலும் அதனை அரசே ஏற்கும். இதேபோன்று சிறு, குறு நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தையும் அரசே ஏற்கும். புதிய மின் கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும், இதன்மூலம் அனைத்து வீட்டு இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் உயர்வு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார ஒழுங்குமுறை வாரியம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சதவீத கட்டண உயர்வை மின்சாரத் துறைக்கு பரிந்துரை செய்யும். இந்தப் பரிந்துரையின் அடிப்படையில், மின்சார கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டில் பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து