முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்

வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2025      தமிழகம்
Ajith-Kumar 2025-06-29

சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார் (வயது 27).இந்தநிலையில் நகைத்திருட்டு வழக்கு தொடர்பாக, அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், அவரை கடுமையாக தாக்கினர். இதில் மயங்கி விழுந்து அஜித்குமார் உயிரிழந்தார்.தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் மடப்புரம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஜித்குமார் உடலின் வெளிப்புறத்தில் சிராய்ப்பு காயங்கள் என 44 காயங்களும், ரத்த கட்டுக் காயங்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதும், சிகரெட்டால் சூடு வைத்ததும் அம்பலமாகி உள்ளது.

இதுதொடர்பாக வெளியான தகவல்படி:-

* சுமார் 50 வெளிப்புற காயங்கள், 

* இதில் 12 சிராய்ப்பு காயங்கள்

* மீதி அனைத்தும் ரத்த கட்டு எனும் கன்றிய காயங்கள்

* கன்றிய காயங்கள் ஒவ்வொன்றும் வெறும் ஒற்றை காயங்கள் அல்ல

* காயங்கள் பல்வேறு கோணங்களில் உள்ளன

* வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயம் உள்ளது

* தலை கபாலத்தில் அடியும், உள்ளே மூலையில் ரத்த கசிவும் உள்ளது.

* சிகரெட் சூடு வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளது

இது மிக தீவிரமான சித்திரவதை முறைகளில் ஒன்று. இது முற்றிலும் மனித உரிமைகளை மீறும் செயல். சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது.  இந்த சித்திரவதை திட்டமிட்டு, தொடர்ந்து, பல மணி நேரங்கள் நடந்து இருக்கக்கூடியது. உடல் முழுவதும் தாக்கங்கள் இருப்பதால், தனிநபரால் மட்டும் செய்யப்பட்டது எனச் சொல்ல முடியாது.இது தீவிர காவல் சித்திரவதை, மற்றும் சட்டவிரோத விசாரணை, அல்லது படுகொலை எனக் உறுதி படுத்தும் வகையில் உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து