முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      விளையாட்டு
ind-eng

Source: provided

பர்மிங்காம்: ஆகாஷ் தீப் அபார பந்து வீச்சு காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான  2-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.

இந்திய அணி 587 ரன்கள்... 

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தின் (269 ரன்) உதவியுடன் இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஜேமி சுமித் (184 ரன்), ஹாரி புரூக் (158 ரன்) சதம் அடித்தனர்.

டிக்ளேர்... 

பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 28 ரன்னுடனும், கருண் நாயர் 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று முன்தினம்  4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 83 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

608 ரன்கள்  இலக்கு...

ரவீந்திர ஜடேஜா 69 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 161 ரன்னில் (162 பந்து, 13 பந்து, 8 சிக்சர்) சோயிப் பஷீர் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது. இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி   ஆட்ட நேர  முடிவில் 3 விக்கெட்டுக்கு 72 ரன்கள் அடித்துள்ளது. ஆலி போப் 24 ரன்னுடனும், ஹாரி புரூக் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

மழையால் தாமதம்... 

கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 536 ரன்களும், இந்திய அணியின் வெற்றிக்கு 7 விக்கெட்டுகளும் தேவைப்பட்டது. இந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் மழையால் தாமதம் ஆனது. மழை நின்ற பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டு இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இங்கிலாந்து அணியின் இரண்டு விக்கெட்டுகளை ஆகாஷ் தீப் வீழ்த்தி அசத்தினார். ஆலி போப் மற்றும் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டினை அவர் கைப்பற்றினார்.

தடுமாற்றம்...

கடைசி நாள் உணவு இடைவெளியின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சிராஜ் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து