எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கணவர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரை அடுத்து 1980-களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பாரதிராஜா இயக்கிய கல்லுக்குள் ஈரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அருணா. தொடர்ந்து சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, நாடோடி ராஜா, டார்லிங் டார்லிங் டார்லிங், முதல் மரியாதை, கரிமேடு கருவாயன்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவரது கணவர் மோகன் குப்தா பிரபல தொழிலதிபர். வீடு, நிறுவனம் உள்ளிட்ட உள்கட்டமைப்புக்கான அலங்காரப் பணிகளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னை, நீலாங்கரையில் கணவர், பிள்ளைகளுடன் அருணா வசித்து வருகிறார். இந்நிலையில் மோகன் நடத்தி வரும் நிறுவனத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கிடைத்த புகார் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் இவரது வீடு, அலுவலங்களில் காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மோகன், அருணா உள்ளிட்ட குடும்பத்தாரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


