முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழல் இல்லை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

வியாழக்கிழமை, 10 ஜூலை 2025      தமிழகம்
Rangasamy 2023 07-16

புதுச்சேரி, புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறும் சூழல் ஏதுமில்லை என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் இடையே சில விஷயங்களில் கருத்து வேறுபாடு மோதலானது. முதல்வர் ரங்கசாமி பரிந்துரையை ஏற்காமல் துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக சீனியாரிட்டி அடிப்படையில் இருந்த டாக்டர் செவ்வேலை சுகாதாரத்துறை இயக்குநராக நியமித்தார். இச்சம்பவம் மோதலாக மாறியது. அதனால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சட்டப்பேரவையில் இருந்து முதல்வர் கோபமாக புறப்பட்டார். முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டுமா என பா.ஜ.க. அமைச்சர் நமச்சிவாயத்திடமும், பேரவைத்தலைவர் செல்வத்திடமும் கேள்வியும் எழுப்பினார்.

அதனால் முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக கட்சியினரிடம் தகவல் பரவியது. மோதல் முடிவுக்கு வராமல், ‘சட்டப்பேரவைக்கு வரப்போவதில்லை’ என முதல்வர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டனர்.

பா.ஜ.க. தரப்பு இச்சூழலை கட்சி மேலிடத்துக்கு தெரியப்படுத்தியது. அதையடுத்து பா.ஜ.க. மேலிடபொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா நேற்று புதுச்சேரி வந்தார்.  கோரிமேட்டில் உள்ள ரங்கசாமி வீட்டுக்கு மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ.க. மாநிலத்தலைவர் ராமலிங்கம் ஆகியோர் வந்தனர். வீட்டின் முதல்தளத்தில் அனைவரும் ஆலோசனை நடத்தினர். முதல்வர் ரங்கசாமி தனது கருத்துகளை மேலிட பொறுப்பாளரிடம் தெரிவித்தவுடன் அதை மேலிடத்துக்கு சொல்வதாக உறுதி தந்த பிறகு செய்தியாளர்களை முதல்வர் ரங்கசாமி சந்தித்தார்.

அப்போது முதல்வர் கூறுகையில், “தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசு வரும் 2026 தேர்தலில் புதுச்சேரியில் வென்று ஆட்சி அமைக்கும்.  நிர்வாக ரீதியில் ஆளுநர், அரசு இடையே பிரச்சினை வரும். மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை பிரச்சினைகளை பேசி சரி செய்வோம். பா.ஜ.க. எப்போதும் எனக்கு அழுத்தம் தந்தது இல்லை.  பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறும் சூழல் ஏதுமில்லை .மாநில அந்தஸ்தை புதுச்சேரியில் உள்ள அனைத்து கட்சியினரும் வலியுறுத்தவேண்டும். இதுதொடர்பாக பிரதமரை எப்போது வேண்டுமானாலும் சந்திப்போம்" என்றார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து