முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற கூட்டத்தொடர்: காங்., எம்.பி.க்களுடன் சோனியா ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      இந்தியா
Sonia 2024-02-13

Source: provided

 புதுடில்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்  தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது. 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த நீண்ட கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு முதல்முறையாக பாராளுமன்றம் கூடுவதால் அதுகுறித்த நடவடிக்கை பற்றியும், இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தத்தில் டிரம்ப்பின் தலையீடு குறித்தும் விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது. கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

இந்த நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் அதுகுறித்து ஆலோசிக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம், பகல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாராளுமன்றத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து