முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      விளையாட்டு
Rishabh-Pant--------

Source: provided

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்ட்சின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார். 

லார்ட்ஸ் மைதானத்தில்... 

இங்கிலாந்து, இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 387 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் (13), கருண் நாயர் (40), சுப்மன் கில் (16) அடுத்தடுத்து ஆட்டமிழக்க கே.எல்.ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

கே.எல்.ராகுல் சதம்...

மூன்றாவது நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது ரன் அவுட்டாகி வெளியேறினார். கே.எல். ராகுல்-ரிஷப் பண்ட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பண்ட் எடுத்த 74 ரன்னில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

சாதனை முறியடிப்பு...

இந்நிலையில், ரிஷப் பண்ட் அடித்த 2 சிக்சர்களையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அவர் அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்ட்சின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக விவியன் ரிச்சர்ட்ஸ் மொத்தம் 34 சிக்சர்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து