Idhayam Matrimony

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      தமிழகம்
Stalin 2021 11 29

திருப்பூர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாடகள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து அவர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் அடுத்த 2 நாள்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். இரு மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்வதுடன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் அவர் திட்டமிட்டு இருந்தார்.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று முதல்வர்  மு.க.ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இருந்து தனது கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க காரில் புறப்பட்டு சென்றபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், 2 நாட்கள் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியதுடன் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுமாறு கூறினர். இதனால், முதல்வர்  மு.க.ஸ்டாலின் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையில், முதல்வரின் கோவை, திருப்பூர் பயணங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வரின் திருப்பூர் மாவட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே முதல்வரின் உடல்நிலை குறித்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “காலை (நேற்று)நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்ப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைச்சுற்றல் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிவதற்குத் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என தெரிவித்துள்ளது. 

முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பார்க்க அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை ஆகியோர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அதேபோல அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மருத்துவமனை வந்திருந்தனர். முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் தொண்டர்கள் கூடினர்.

அப்போலோ மருத்துவமனையில், முதல்வர் ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் உடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார்' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து