Idhayam Matrimony

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      தமிழகம்
Fireworks 2023 07 25

Source: provided

சிவகாசி : சிவகாசி அருகே நேற்று  நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் தற்போது உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தொழிலாளர் கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், ஆண்டியபுரம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்குள்ள ஒரு அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதற ஆரம்பித்தன. பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் பல நூறு மீட்டர் தொலைவு எதிரொலித்தது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக வெடி விபத்து நிகழ்ந்த பகுதிக்கு விரைந்து தீயை அனைத்தனர்.

இந்த வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமத்தை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்தனர் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து