எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க், ஒபாமா கையில் விலங்கு மற்றும் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற ஏ.ஐ. வீடியோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் கையில் விலங்கிட்டு, சிறையில் அடைக்கப்படுவது போன்ற செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட வீடியோவை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் சித்தரிக்கப்பட்டவை என்றோ, உண்மையான வீடியோ அல்ல என்றும் ட்ரம்ப் பதிவிடாதது கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ட்ரூத் என்ற சமூக வலைத்தளப் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்திருக்கும் வீடியோவில், யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை என்றும் பதிவிடப்பட்டிருக்கிறது. அதில் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய வீடியோ ஒன்றில், அமெரிக்க அதிபர் மாளிகையான ஓவல் அலுவலகத்தில், ஒபாமாவை தரையில் அமர்த்தி, கைகளை பின்னால் எடுத்து, இரண்டு எஃப்பிஐ அதிகாரிகள் விலங்கிடுகிறார்கள். இதனை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சோஃபாவில் அமர்ந்து புன்னகைத்தவாறு பார்த்துக் கொண்டிருப்பதாக அந்த வீடியோ அமைந்துள்ளது. அந்த போலியான வீடியோ, ஒபாமா சிறையில், கைதிகளுக்கான ஆரஞ்சு நிற சீருடையில் நின்றிருப்பது போல முடிகிறது.
இந்த வீடியோ போலியானது என்றோ, சித்தரிக்கப்பட்டது என்றோ ட்ரம்ப் குறிப்பிடவில்லை. இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகிறார்கள். கொஞ்சம் கூட பொறுப்பில்லாதவர் என்ற விமர்சனங்களும் வந்துள்ளன. கடந்த வாரம், பராக் ஒபாமா ஒரு மிகப்பெரிய தேர்தல் மோசடியாளர் என்று ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்த நிலையில், நேற்று இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


