Idhayam Matrimony

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      இந்தியா
mumbai-high-court

மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.  

2006-ம் ஆண்டு நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பில் 189 பேர் கொல்லப்பட்டு, 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) விடுவித்தது.

நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் அடங்கிய சிறப்பு அமர்வு, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில் இருந்த கடுமையான குறைபாடுகளை சுட்டிக்காட்டியது. “அடையாள அணிவகுப்பு குறித்து கடுமையான கேள்விகளை எதிர்தரப்பினர் எழுப்பினர். பல சாட்சிகள் வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலம், சிலர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியாக இருந்தனர். பின்னர் திடீரென குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காண்பித்தனர், இது அசாதாரணமானது. பல ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென குற்றம் சாட்டப்பட்டவரை எவ்வாறு நினைவு கூர்ந்து அடையாளம் காண முடிந்தது என்பதை விளக்க பலர் தவறிவிட்டனர்.” என்று சிறப்பு அமர்வு குறிப்பிட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பின் தோல்வியை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், “குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் அளித்திருக்கும் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. இந்த வழக்கில் குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது.” எனத் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில், கமல் அன்சாரி என்பவர் 2021 இல் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த மீதமுள்ள 11 பேர் இப்போது விடுதலை செய்யப்பட உள்ளனர். இவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து