Idhayam Matrimony

நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானத்துக்கு 200 எம்.பி.க்கள் ஆதரவு

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      இந்தியா
Yashwant-Verma 2025-03-22

Source: provided

புதுடில்லி : பணம் மூட்டை சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய 200-க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக லோக்சபா ஒத்திவைக்கப் பட்டது. அதே நேரத்தில் ராஜ்யசபாவில் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில், பணம் மூட்டை சிக்கிய விவகாரத்தில்,நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க தீர்மானம் தொடர்பாக, லோக்சபாவில் மொத்தம் 145 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் 63 எம்.பி.க்களும் தீர்மானம் கொண்டு வர மனுத்தாக்கல் செய்தனர்.

பதவி நீக்கத் தீர்மானத்தை தாக்கல் செய்த 145 லோக்சபா எம்.பி.,க்களில் அனுராக் தாக்கூர், ரவி சங்கர் பிரசாத், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் , ராஜீவ் பிரதாப் ரூடி, பிபி சவுத்ரி, சுப்ரியா சுலே மற்றும் வேணுகோபால் ஆகியோர் அடங்குவர்.அரசியலமைப்பின் பிரிவுகள் 124, 217 மற்றும் 218ன் கீழ் நீதிபதி வர்மாவுக்கு எதிராக நோட்டீஸ் சமர்ப்பிக்கப் பட்டது.

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தில் லோக்சபாவில் குறைந்தது 100 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் குறைந்தது 50 எம்.பி.க்களும் கையெழுத்திட வேண்டும். இந்த தீர்மானத்தை லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான அறிவிப்பில் 100க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு உள்ளனர். பதவி நீக்கம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்தைத் தெரிவித்து உள்ளனர் என பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து