முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் நடைபெறுகிறது 2025 - உலகக்கோப்பை செஸ் : சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவிப்பு

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      விளையாட்டு
Chess 2023-10-15

Source: provided

புதுடில்லி : 2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (பிடே) அறிவித்து உள்ளது.

செஸ் உலகக்கோப்பை... 

ஜார்ஜியாவில், பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் வைஷாலி, ஹரிகா, ஹம்பி உள்பட 46 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர். 

இந்தியாவில்...

இந்நிலையில், 2025ம் ஆண்டு ஆடவர் செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (பிடே) அறிவித்து உள்ளது. அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 27ம் தேதி வரை செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. 206 வீரர்கள் நாக் அவுட் முறையில் போட்டியிடுவார்கள். செஸ் போட்டி நடைபெறும் நகரம் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். 

மகிழ்ச்சி அளிக்கிறது...

இது குறித்து பிடே தலைமை நிர்வாக அதிகாரி எமில் சுடோவ்ஸ்கி கூறியதாவது: செஸ் போட்டிகள் மீது ஆர்வமும், அதிக ஆதரவும் கொண்ட நாடான இந்தியாவில் 2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை போட்டி நடக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. செஸ் போட்டிகள் மீது இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தை கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

செஸ் ஒலிம்பியாட்...

கடந்த 2022ம் ஆண்டு சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 150 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகள் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து