முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.100 கோடி ஊழலை அம்பலப்படுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடை மாற்றம்..?

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      இந்தியா
IAS 2025-08-01

Source: provided

லக்னோ : ரூ.100 கோடி ஊழலை அம்பலப்படுத்திய ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரிங்கு சிங் ராஹி, ஷாஜகான்பூரின் துணை கலெக்டராக பொறுப்பேற்ற 36 மணி நேரத்திற்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்ட துணை கலெக்டராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரிங்கு சிங் ராஹி கடந்த திங்கட்கிழமை (ஜூலை 28) பொறுப்பேற்றார். துணை கலெக்டராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, தனது அலுவலக கழிப்பறை அசுத்தமாக இருப்பதற்கு பொறுப்பேற்று, வக்கீல்களின் முன்பு தோப்புக்கரணம் போட்டு, தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், துணை கலெக்டராக பொறுப்பேற்ற 36 மணிநேரத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரிங்கு சிங் ராஹி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் லக்னோவில் உள்ள வருவாய் ஆணையகத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரிங்கு சிங் ராஹி பணியிட மாறுதலுக்கு தோப்புக்கரணம் போட்ட செயல் தான் காரணமா? என்று உயர் அதிகாரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர் அதுவும் காரணமாக இருக்கலாம் என்று கூறினார். இருப்பினும், ரிங்கு சிங்கின் பணியிட மாறுதலுக்கு அவரது நேர்மையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன. அது, அவரது கடந்த கால பணி விபரங்கள் மூலம் தெள்ளத் தெளிவாகிறது.

கடந்த 2008ம் ஆண்டு முஷாபர்நகர் மாவட்ட நலத்துறை அதிகாரியாக பணியாற்றி போது, ரூ.100 கோடி ஊழலை அம்பலப்படுத்தினார். இதையடுத்து, 2009ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த போது, ரிங்கு சிங் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இவர், தாடை எலும்புகள் பாதிக்கப்பட்டதுடன், வலது கண் பார்வையையும் இழந்தார். கடந்த 2012ல் பதவி உயர்வு மறுக்கப்பட்டதால் லக்னோவில் தர்ணாவில் ஈடுபட்டார்.  இந்த நிலையில், ஜூன் 30ம் தேதி லக்னோவில் உள்ள வருவாய் ஆணையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து