Idhayam Matrimony

முதல்வரை சந்திக்க நேரம் கேட்கவில்லை: ராமதாஸ்

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Ramadoss-1

Source: provided

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட லேசான தலை சுற்றலை தொடர்ந்து சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து பலரும் விசாரித்தனர். இதனிடையே, அரசு பணிகளை தொடர்ந்து கவனித்து வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி மாலை வீடு திருப்பினார். இதையடுத்து வீட்டில் ஓய்வில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தலைமை செயலகத்திற்கு வந்து பணிகளை தொடர்ந்து வருகிறார்.

இதனிடையே, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று முன்தினம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா ஆகியோர் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.  இதுதொடர்பாக ராமதாசிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று தெரிவித்தார்.

அடுத்து நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் பணியாற்றி வரும் நிலையில், அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும் என்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பும் விடுத்து வருகின்றனர். இதற்கெல்லம் பதில் அளிக்காமல் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டணி விவகாரத்தில் சத்தமில்லாமல் வேலை பார்ப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து