முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ் வோக்ஸ் விலகல்: இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Eng 2024-03-26

Source: provided

லண்டன் : கிறிஸ் வோக்ஸ் இந்த போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.  இது இங்கிலாந்து அணிக்கு பலத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

கடைசி டெஸ்ட்... 

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் 'டிரா' வில் முடிந்தது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா பேட்டிங்... 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (ஜூலை 31) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

கருண் நாயர் அரை சதம்...

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 ரன்கள் எடுத்தும், கே.எல்.ராகுல் 14 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். சாய் சுதர்சன் 38 ரன்கள், ஷுப்மன் கில் 21 ரன்கள் எடுத்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் 109 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். துருவ் ஜுரெல் 19 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 26 ரன்கள் எடுத்தனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 

ஜோஷ் டங் 3 விக்கெட்...

இங்கிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜோஷ் டங் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

வோக்ஸ் காயம்...

இதனிடையே நேற்றைய ஆட்டத்தின்போது இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் பீல்டிங் செய்கையில் இடது தோள்பட்டையில் மோசமான காயத்தை சந்தித்தார். வலியால் துடித்த அவர், உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அவரது கரம் அவரது ஸ்வெட்டரால் கட்டப்பட்டு, மருத்துவக் குழுவினரின் உதவியுடன் ஓய்வறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னடைவு...

இந்நிலையில் கிறிஸ் வோக்ஸ் இந்த போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். அவரால் பந்துவீச முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து அணிக்கு பலத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து