முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரகானே, புஜாராவுக்கு இடமில்லை

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Rudraaj-Gaikwat 2024-04-20

Source: provided

 துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர்15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. இந்த போட்டியில் வடக்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்கு மண்டலங்கள் காலிறுதியில் மோதுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதியில் கால்பதிக்கின்றன.

இந்நிலையில் இந்த தொடருக்கான மேற்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாகூர் தலைமையிலான அந்த அணியில் இந்திய நட்சத்திர வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால், கெய்க்வாட் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் அந்த அணியில் முன்னணி வீரர்களான ரகானே மற்றும் புஜாராவுக்கு இடமளிக்கப்பட வில்லை. மேற்கு மண்டல அணி விவரம் பின்வருமாறு:- ஷர்துல் தாக்கூர் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆர்யா தேசாய், ஹர்விக் தேசாய், ஷ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான், ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்மீத் படேல், மனன் ஹிங்ராஜியா, சவுரப் நாவலே, ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன்,தர்மேந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, அர்சான் நாக்வாஸ்வாலா.

___________________________________________________________________________________________

பயிற்சியாளரானார் கலித் ஜமில் 

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரரான கலித் ஜமில், ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளரான நியமிக்கப்பட்டுள்ளார்.  ஐ-லீக் 2017 சீசனில் ஐஸ்வால் கால்பந்து கிளப் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி (பயிற்சியாளராக) சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். 48 வயதாகும் கலித் ஜமில், தற்போது ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளராக உள்ளார். அனைத்து இந்திய கால்பந்து பெடரேசனின் நிர்வாகக் குழு கலித் ஜமிலை தேர்வு செய்துள்ளது. 

இறுதிப் பட்டியலில் மூன்று பேரை தேர்வு செய்து வைத்திருந்தது. அதில் இரண்டு போட்டியாளர்கள் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ஸ்டீப்ன் கான்ஸ்டைன் மற்றும் ஸ்லோவாகியா தேசிய அணியின் ஸ்டீபன் தர்கோவிக் ஆகியோர் ஆவார்கள். கலித் ஜமித் ஆகஸ்ட் 29ஆம் தேதியில் இருந்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். இந்தியா ஆகஸ்ட் 29ஆவது தேதியில் இருந்து மத்திய ஆசிய கா்பந்து அசோசியேசன் தேசிய கோப்பை தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் நடக்கிறது.

___________________________________________________________________________________________

5 விக்கெட் வீழ்த்திய கிஷோர்

இங்கிலாந்தின் செஸ்டரில் துர்காம்- சுர்ரே அணிகளுக்கு இடையிலான கவுன்ட்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. சுர்ரே அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் விளையாடி வருகிறார். முதல் இன்னிங்சில் துர்காம் 153 ரன்னில் சுருண்டது. சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் சுர்ரே முதல் இன்னிங்சில் 322 ரன்கள் குவித்தது.

169 ரன்கள் பின்தங்கிய நிலையில் துர்காம் அணி 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அந்த அணி 344 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. சாய் கிஷோர் அபாரமான பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். 113.4 ஓவரில் 41.4 ஓவர்கள் வீசினார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட்டுகள் சாய்த்தார். பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சுர்ரே 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

___________________________________________________________________________________________

அரையிறுதியில் லக்சயா சென்

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான லக்சயா சென் (இந்தியா), சீனாவின் சு சுவான் சென் உடன் மோதினார்.

இந்த மோதலில் எதிர்பார்த்தது போலவே அனுபவம் வாய்ந்த லக்சயா சென் 21-18-4, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் சு சுவான் சென்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

___________________________________________________________________________________________

சென்னையில் தேசிய ஸ்குவாஷ் 

எம்.சி.சி. ஆல்டிஸ் மாஸ்டர்ஸ் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னை சேப்பாக்கம் உள்ள எம்.சி.சி. கிரிக்கெட் கிளப்பில் இன்று (ஆகஸ்ட் 2) தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 19 மாநிலங்களைச் சேர்ந்த 185 பேர் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.  இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.4 லட்சம் ஆகும். 

ஆடவருக்கு 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை என 8 பிரிவிலும், மகளிருக்கு 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவிலும் போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவருக்கு ரூ.20 ஆயிரமும், 2-வது இடம் பெறுபவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

___________________________________________________________________________________________

கருண் குறித்து பீட்டர்சன் 

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய வீரர் கருண் நாயர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.  .

இந்த நிலையில் கருண் நாயர் குறித்து கெவின் பீட்டர்சன்  கூறியதாவது:- முதல்நாள் நாளில் இந்தியாவின் பேட்டிங்கை நிலை நிறுத்திய கருண் நாயரின் ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது ஆட்டத்தில் மிகப்பெரிய அளவில் கடின உழைப்பை போட்டுள்ளார். இங்கிலாந்தில் பேட்டிங் செய்வது குறித்து ஐ.பி.எல். தொடரின்போது, பலமணி நேரம் நாங்கள் இருவரும் பேசியுள்ளோம்.  இவ்வாறு கருண் நாயர் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து