முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Hockey 2023 04 17

Source: provided

12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஹாக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.  இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெர்த்தில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. ஆஸ்திரேலிய தொடருக்கான 24 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக நீடிக்கிறார்.

இந்திய அணி வருமாறு:- கோல்கீப்பர்கள்: கிருஷ்ணன் பதாக், சுரஜ் கார்கெர், பின்களம்: சுமித், ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), சஞ்சய், அமித் ரோஹிதாஸ், நீலம் சஞ்சீப் செஸ், ஜூக்ராஜ் சிங், பூவன்னா, நடுகளம்: ராஜிந்தர் சிங், ராஜ்குமார் பால், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், ரபிசந்திர சிங் மொய்ராங்தெம், விஷ்ணுகாந்த் சிங், முன்களம்: மன்தீப் சிங், ஷிலானந்த் லக்ரா, அபிஷேக், சுக்ஜீத் சிங், தில்பிரீத் சிங், ஆதித்யா லாலேஜ், செல்வம் கார்த்தி (தமிழ்நாடு). பெங்களூரு சாய் மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணி, வருகிற 8-ந் தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறது.

தெலங்கானா காவல்துறை பாராட்டு

ஹைதராபாதைச் சேர்ந்த முகமது சிராஜ் (31 வயது) இந்திய டெஸ்ட் அணிக்காக 2020 முதல் விளையாடி வருகிறார். இதுவரை 41 டெஸ்ட்டில் 123 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் 100க்கும் அதிகமான விக்கெடுக்களை வெளிநாட்டில் எடுத்து அசத்தியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியின் கடைசி டெஸ்ட்டில்  முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

சிராஜுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.  இந்நிலையில், தெலங்கானா காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில், “ டிஎஸ்பி முகமது சிராஜுக்கு வாழ்த்துகள்! இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்றி வெற்றிபெற உதவிய அவரது சிறப்பான செயல்பாட்டுக்கு வாழ்த்துகள். தெலங்கானாவின் பெருமை. காவல்துறை, விளையாட்டு உடையில் அவர் ஹீரோ!” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்திய மல்யுத்த அணியில் ஷெராவத்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான இந்திய அணி தேர்வுக்கான போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான அமன் ஷெராவத் கலந்து கொண்டார். இதில் அவர் தன்னை எதிர்த்த சுமித், ராகுல் உள்ளிட்டோரை எளிதில் வீழ்த்தி இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்தார்.

இதேபோல் தங்கள் எடைப்பிரிவுகளில் வெற்றி பெற்ற உதித், சன்னி குமார், சுஜீத் கல்கல், அனில், ரோகித், ஜெய்தீப், அமித், முகுல் தாஹியா, தீபக் பூனியா, விக்கி, ரஜத் ஆகியோரும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.

 

சிறந்த டெஸ்ட்: தர்மசேனா வெளிப்படை

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.  

இந்த ஆட்டத்தில் கள நடுவர்களில் ஒருவராக இலங்கையின் குமார் தர்மசேனா செயல்பட்டார். இந்நிலையில், அவர் ஓவர் டெஸ்ட் போட்டி குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியா - இங்கிலாந்து இடையிலான சிறந்த டெஸ்ட் போட்டியை (ஓவல் டெஸ்ட்) மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனது மிகப்பெரிய அதிர்ஷடம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இறுதியில் கோகோ காப் ஜோடி 

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப்-மெக் கார்ட்னி கெஸ்லர் ஜோடி, செர்பியாவின் டேனிலொவிச்- தைவானின் ஹை சூ வெய் ஜோடி உடன் மோதியது.

இதில் கோகோ காப் ஜோடி முதல் செட்டை 5-7 என இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட கோகோ காப் ஜோடி அடுத்த இரு செட்களை 6-4, 10-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையான கோகோ காப் தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகசியம் பகிர்ந்த சிராஜ்

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி டெஸ்ட்டை 6 ரன்களில் வென்று தொடரை 2-2 என சமன்செய்தது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார். இவ்வளவு சிறப்பாக விளையாடியது எப்படி என செய்தியாளர் சந்திப்பில் சிராஜ் விளக்கம் அளித்துள்ளார். 

அதில் அவர் கூறியதாவது: தொழில்முறை வீரராக இருக்கும் எல்லோருக்கும் நம்பிக்கை என்பது முக்கியம். நம்பிக்கையின்றி எதுவுமே சாத்தியமில்லை. பொதுவாக, நான் காலை 8 மணிக்கு எழுந்திருப்பேன். ஆனால், போட்டியின் கடைசி நாள் காலை 6 மணிக்கே எழுந்துவிட்டேன். கூகுளில் நம்பிக்கை என்ற இந்தப் புகைப்படத்தை தேடி எனது மொபைலில் வால்பேப்பராக வைத்தேன். இன்று எனது நாட்டிற்காக என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என நினைத்தேன். எந்த நேரத்திலும் என்னால் போட்டியை மாற்றமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். சிராஜ் தீவிரமான ரொனால்டோ ரசிகர். விக்கெட் எடுத்தபிறகு ரொனால்டோ பாணியில் (சுயூ..) கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து