முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சா எண்ணெய் விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      உலகம்
Central-government 2021 12-

மாஸ்கோ, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது அவசியமான நடவடிக்கை என அமெரிக்காவுக்க இந்தியா பதிலளித்துள்ளது.

ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது  பற்றி இந்தியாவுக்கு கவலை இல்லை. இதன் காரணமாக நான் இந்தியாவுக்கு எதிராக வரி விதிப்பை கணிசமான அளவில் உயர்த்த இருக்கிறேன் . ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு வரிகளை மேலும் அதிகரிக்க போகிறேன்" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.  

இந்நிலையில் இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசுகையில், இந்தியாவின் எரிசக்தி கொள்கை அதன் தேசிய நலன் மற்றும் உலக சந்தையின் நிர்ப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டது.

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது அவசியமான நடவடிக்கை. உக்ரைன் போர் தொடங்கியபோது, இந்தியாவின் வழக்கமான எண்ணெய் சப்ளையர்கள் தங்கள் விநியோகங்களை ஐரோப்பாவிற்கு திருப்பிவிட்டனர். அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவுக்கு குறைந்த வாய்ப்புகள் இருந்தன. எனவே ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 

இது லாபம் ஈட்டும் உத்தி அல்ல, மாறாக பொதுவான இந்திய நுகர்வோருக்கு மலிவான மற்றும் தடையற்ற விநியோகத்தை வழங்குவதற்கான முன்னுரிமையாகும். இந்தியாவை விமர்சிக்கும் நாடுகள் தாங்களே ரஷ்யாவிடம் வணிகம் செய்கின்றன. அவர்களுக்கு அப்படி செய்வது கட்டாயம் அல்ல. ஆனால் அவர்கள் லாபத்திற்காக அவ்வாறு செய்கிறார்கள் என்பதுதான் ஒரே வித்தியாசம். மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவதற்கு முன், அவர்கள் தங்கள் சொந்த நடத்தையைப் பார்க்க வேண்டும்" என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து