முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் ரேவண்ணாவுக்கு ரூ.540 கூலி

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      இந்தியா

பெங்களூரு, சிறையில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ரூ.540 தினக்கூலி  வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு, பாலியல் குற்றச்சாட்டில் சிக்குவதற்கு முன்பு, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவின் மாதச் சம்பளம் ரூ.1.2 லட்சம். இனி, சிறையில் ரூ.540க்கு மிகாமல் தினக்கூலி வழங்கப்படும்.2024-ம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்து, எம்எல்ஏ, எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால், பாலியல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டு 14 மாதங்களில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி 8 வாரங்களில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு முக்கிய பிரமுகர் தொடர்புடைய வழக்கில் இவ்வளவு விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஹசன் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக அறியப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை பெற்ற ஒரு கைதி, வாரத்தில் ஆறு நாள்கள், நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார். இவர்களுக்கு ரூ.540க்கு மிகாமல் தினக்கூலி வழங்கப்படும். சிறைத் துறை விதிப்படி, தண்டனை பெற்ற அனைத்துக் கைதிகளும் வேலை செய்து சம்பாதிக்க தகுதி பெற்றவர்கள். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு இதுவரை எந்த வேலையும் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மு

தலில், பயிற்சி இல்லாமல் செய்யும் வேலைகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள். ஓராண்டுக்குப் பின், அவர்களின் திறமைக்கு ஏற்ப பயிற்சி கொடுத்து அந்தப் பணிகளுக்கு ஒதுக்கப்படுவார்கள். தையல் உள்ளிட்ட பணிகளைக் கற்றுக் கொள்ளலாம். அந்த வகையில், எந்தப் பணியை செய்வது என்பது குறித்து முடிவெடுக்க அவருக்கு ஒரு சில நாள்கள் அவகாசம் அளித்து அவர் விருப்பமான பணியை ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து