முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி கடுமையாக ஆடி சவால் கொடுக்கும் என்று தெரியும் பயிற்சியாளர் மெக்கல்லம் பகிர்வு

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
4-Ram-50

Source: provided

லண்டன்: இந்தத் தொடருக்கு வரும்போதே இந்திய அணி கடுமையாக ஆடி சவால் கொடுக்கும் என்று எங்களுக்குத் தெரியும் என இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலம்  தெரிவித்துள்ளார். 

இந்தியா த்ரில் வெற்றி... 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

மிகச்சிறந்த தொடர்... 

இந்நிலையில், டெஸ்ட் தொடர் குறித்து மெக்கலம் கூறியதாவது:-  “நான் பங்கு பெற்றதிலேயே மிகச்சிறந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இது மட்டும்தான். 6 வாரங்களாக 5 டெஸ்ட் போட்டிகளும் இரு தரப்புமாக மாறி மாறி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஊசலாடிக் கொண்டிருந்தது. இந்த டெஸ்ட் தொடரில் அனைத்தும் இருந்தது. போர்க்குணம், சண்டை, சகோதரத்துவம், அன்பு, சில வேளைகளில் சாதாரணமான சராசரி கிரிக்கெட், சில வேளைகளில் உக்கிரமான ஆட்டம் அனைத்தும் இருந்த தொடராகும் இது.

சவால் கொடுக்கும்... 

இந்தத் தொடருக்கு வரும்போதே இந்திய அணி கடுமையாக ஆடி சவால் கொடுக்கும் என்று எங்களுக்குத் தெரியும். எங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இந்திய அணி சோதிக்கும் என்பதை அறிவோம். இரு அணிகளுமே சோதிக்கப்பட்டன, கடும் சோதனைக்குள்ளாகின. 2-2 என்பது தொடர் ஆடப்பட்ட உக்கிரத்திற்கான நியாயமே.

அசந்து விட்டேன்...

நான் பங்கு பெற்றதில் மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் இது, அதுவும் சிராஜ் கடைசி விக்கெட்டை வீழ்த்திய போது கடும் ஏமாற்றமாக இருந்தாலும் ஒரு கிரிக்கெட் வீரராக அவரிடம் உள்ள போராட்டக் குணத்தில் அசந்து விட்டேன். அவர் என்ன செய்தாரோ அவர் அதைச் செய்த விதம் அபாரம்.

காட்சிப்பொருளாக...

அனைத்து போட்டிகளும் 5-ம் நாள் வரை சென்றது, இரு அணிகளும் ஆடிய உக்கிரமான ஆட்டம், கடும் அழுத்தம் என இத்தனை சோதனைகளில் கேட்ச்கள் விடப்படுவது இயற்கைதான். ஆம்! கடைசியாக கேட்ச்களை எடுத்திருந்தால் வென்றிருக்கலாம் என்பதுதான் உண்மை. ஆனால் நாம் அதை அப்படிப் பார்க்க முடியாது. ஆனால் ஒரு கிரிக்கெட் ரசிகனாக இந்தத் தொடர் ஒரு மிகச்சிறந்த காட்சிப்பொருளாக இருந்தது.

இதே பாணி... 

நாங்கள் இதே பாணி கிரிக்கெட்டைத்தான் ஆடுவோம். இந்தப் பாணியைக் கைவிட்டோமானால் நாங்கள் பலவீனமாகி உடைந்து நொறுங்கும் நிலைக்கு வந்து விடுவோம். நாம் நம்பும் விஷயத்திற்கு உண்மையாக இருந்தால் அது நமக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். லார்ட்ஸில் அதைத்தான் செய்தோம்.

பெரிய வாய்ப்புகளை... 

பேட்டிங்கில் தைரியமாக ஆடினோம். ஆனால் தோல்வி எங்கிருந்து வந்தது என்பது கண்டுபிடிப்பது கடினம். நம் பாணியில் நாம் ஆடுவது நமக்கு உத்தரவாதத்தை அளிக்காவிட்டாலும் பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது” என இங்கிலாந்தின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து