Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      தமிழகம்
DCM-1-2025-08-05

சென்னை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது., முதல்வர்  மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நேற்று நடத்தினோம். சென்றாண்டு கனமழை நேரத்தின் போது கிடைத்த அனுபவங்கள், அவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வுக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் நிலை குறித்து இக்கூட்டத்தில் கேட்டறிந்தோம்.

மழை நீர் வடிகால்களை சரி செய்வது - கால்வாய்களுக்கான நீர்வழிப்பாதைகளை சீரமைப்பது - முகத்துவாரம் மற்றும் கழிமுகப்பகுதிகளில் நீர் வெளியேறும் வண்ணம் அவற்றை ஆழப்படுத்துவது - சாலைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளின் நிலை குறித்து சென்னை மாநகராட்சி - நீர்வளத்துறை - நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து நிறைவு செய்திட வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம். ஒருங்கிணைந்து செயல்பட்டு பருவமழை நேரத்தில் பாதிப்புகள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்று இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொண்டோம். என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து