முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா ஆக்கிரமிப்பு குறித்த பேச்சு: ராகுலுக்கு இன்டியா கூட்டணி ஆதரவு

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      இந்தியா
Rahul-Gandhi-2024-08-22

புதுடில்லி, சீனா ஆக்கிரமிப்பு குறித்த ராகுல் காந்தியின் பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், டில்லியில் நடைபெற்ற இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

இந்திய - சீன எல்லையில் 2,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக கடந்த 2022ல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி தீபங்கர் தத்தா  'இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்தது உங்களுக்கு எப்படித் தெரியும்? ஆதாரங்கள் உள்ளதா? ஒரு உண்மையான இந்தியர் என்றால் நீங்கள்(ராகுல்) இப்படி பேசியிருக்கமாட்டீர்கள்?' என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் நேற்று (ஆக. 5) காலை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, கார்கே, ஜெயராம் ரமேஷ், கனிமொழி, திருச்சி சிவா, சுப்ரியா சுலே உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்திக்கு இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் இதுபற்றி, "அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகள் குறித்து தேவையற்ற ஒரு கருத்தை தற்போது பதவியில் உள்ள நீதிபதிகள் கூறியுள்ளதாக இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். தேசிய நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவிப்பது அரசியல் கட்சிகளின் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பாகும். நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க அரசு இவ்வளவு அழகாக தவறும்போது எல்லைகளை காக்க அவர்களை பொறுப்பேற்க வைப்பது ஒவ்வொரு குடிமகனின் தார்மீகக் கடமையாகும்" என்று பதிவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து