முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே மாதத்தில் 3.53 கோடி பேர் பதிவு: மோடியின் திட்டம் கின்னஸ் சாதனை

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      இந்தியா
mODI 2023-05-25

புதுடெல்லி, மோடியின் பரிக்‌ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியின் 8-வது பதிப்பிற்கு ஒரே மாதத்தில் 3.53 கோடி பேர் பதிவு செய்து கின்னஸ் சாதனை படைக்கப் பட்டுள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பேசும் பரிக்ஷா பே சர்ச்சா (தேர்வு பற்றிய கலந்துரையாடல்) திட்டம் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. பிரதமர் மோடியின் திட்டமான பரிக்ஷா பே சர்ச்சா கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களையும் தேர்வை எழுத உதவும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனைகளை அளித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் 8-வது பதிப்பிற்கு ஒரு மாதத்தில் 3.53 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு தளத்தில் அதிகம் பேர் பதிவு செய்ததற்காக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம்  நடந்த விழாவில் கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், அஸ்வினி வைஷ்ணவ், ஜிதின் பிரசாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து