முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானை மண்டியிடச் செய்த புதிய இந்தியாவை பார்த்து உலகமே வியந்தது: பிரதமர்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2025      இந்தியா
Modi PM 2024-12-20

Source: provided

பெங்களூரூ : ஆபரேஷன் சிந்தூரின் போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தானை சில மணி நேரத்தில் மண்டியிட வைத்த புதிய இந்தியாவை உலகமே கண்டு வியந்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரின் ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையையும், 3 வந்தே பாரத் ரயில் சேவையையும், பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;  ஆப்பரேஷன் சிந்தூர், இந்திய படைகளின் வெற்றியைக் காட்டியது. எல்லைக்கு அப்பால் பல கிலோமீட்டர் தூரத்தில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை நாங்கள் அழிக்கும் திறனையும், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தானை சில மணி நேரத்தில் மண்டியிட வைக்கும் நமது ஆற்றலையும் உலகம் கண்டது. இந்த புதிய இந்தியாவின் முகத்தை முழு உலகமே பார்த்தது.

புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூரு மாறியுள்ளது.  பெங்களூரூவின் வெற்றிக்கு பின்னணியில் இங்குள்ள மக்களின் கடுமையான உழைப்பும் திறமையும்தான் காரணம்.

உலகில் 3வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.  கடந்த 2014ம் ஆண்டில் நம் நாட்டில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில்சேவை இருந்தது. தற்போது, 24 நகரங்களில் சுமார் 1,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவுகளில் மெட்ரோ ரயில்சேவை வழங்கப்படுகிறது.

அதேபோல, 2014க்கு முன், ரயில் பாதையில் சுமார் 20,000 கிலோ மீட்டர் மின்மயமாக்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 40,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரயில் பாதைகள் மின்மயமாக்கியுள்ளோம். 2014 வரையில் இந்தியாவில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது அதன் எண்ணிக்கை 160க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நீர்வழி போக்குவரத்து வழித்தடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2014ல், வெறும் 3 தேசிய நீர்வழித்தடங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன. இப்போது இதன் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து